பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று குழுப் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாஞ்செஸ்டர் யுனைடெட்டை 1-0 என வென்ற அசியான்ஆல்-ஸ்டார்ஸும், வெற்றிகரமாக முடிந்த 46வது அசியான்அவையமும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன என்றார்.
மயன்மாவின் மாங் மாங் ல்வின் 72வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் அட்ரியன் சேகசிச்சின் உதவியுடன் கோல் அடித்தார்.
அசியான்அவையின் ஏற்பாடுகளில் ஈடுபட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். சின்ன நாடுகள், பெரிய நாடுகள், செல்வந்த நாடுகள் ஆகியவை ஒன்றாக ஒத்துழைப்புடன் செயல்படுவதை அவர் பாராட்டினார்.
அதேசமயம், அமெரிக்காவின் ஒற்றைத் தீர்மான நியாயச்சுங்க வரிகளை எதிர்க்க அசியான்அவை ஒருமித்த நிலை கொண்டிருப்பதாகவும், 660 மில்லியன் மக்களின் நலனில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.