கமுந்திங் அருகே வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது விரைவுப் பேருந்து மோதி தீப்பிடித்து, 28 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறிய காயமுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பேருந்து 90% எரிந்து நாசமானது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.