தனுஷ் தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார். அவருடைய 'குபேரா' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது. மேலும், அவர் நடிப்பில் எட்டு படங்கள் வரிசையில் உள்ளன.
அவர் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படம், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கிறார்.
தவிர, 'வடசென்னை 2' (வெற்றிமாறன் இயக்கம்), 'புதுப்பேட்டை 2' (செல்வராகவன் இயக்கம்), மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் 2' (செல்வராகவன் இயக்கம், தனுஷ் ஹீரோ) ஆகிய படங்களிலும் நடிக்க இருக்கிறார்.