அடுத்த ஆண்டு முதல் ஒரங்க் அஸ்லி குடியிருப்புகளில் உள்ள கிமாஸ் முன்பள்ளிகள் டிஜிட்டல் முறையில் செயல்பட தொடங்கும் என ஜகோவா தலைமை இயக்குநர் டத்தோ சபியா தெரிவித்தார்.இணைய வசதி மற்றும் உரிய உள்கட்டமைப்புகள் வழங்கப்படும். இந்த முயற்சி, எதிர்வரும் 5 ஆண்டுகளில் ஒரங்க் அஸ்லி சமூகத்தில் மனித வள மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.முன்னுரிமை பகுதிகளாக தொலைதூரக் கிராமங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.