தக் லைஃப் இசை விழாவில் கமல் கூறிய "தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது" எனும் கூற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மறுக்கப்பட்டால், ‘தக் லைஃப்’ திரைப்பட வெளியீடுக்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.கமல், தன் கருத்தில் தவறு இல்லை என மன்னிப்பை நிராகரித்துள்ளார். மேலும், படம் வெளியீட்டை பாதுகாக்க ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.