ஜூன் 5ம் தேதி வெளியாகும் தக் லைஃப் படம், மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படமாகும். 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல்-மணி ரத்னம் கூட்டணி உருவான இப்படத்திற்கு மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.ப்ரீ புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி, உலகளவில் நல்ல வரவேற்பு பெற்றது. ரிலீஸ் முன்னதாகவே இதுவரை ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.