நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், தன்ஷிகா தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக அந்தமான் தீவுகள் நோக்கி புறப்பட்டுள்ளார். அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதால், அது முடிந்ததும் திருமண வேலைகளில் முழுமையாக ஈடுபட திட்டமிட்டுள்ளாராம்.