மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவான 'தக் லைஃப்' படம், கர்நாடகத்தில் வெளியீட்டு தடை விவகாரம் நடந்தாலும், ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருகிறது.
இன்று வரை ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதுடன், முதல் நாள் மட்டும் உலகளவில் ரூ.40-50 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.