Offline
Menu
121 பள்ளிக்கூடங்களில் புதிய கூடுதல் வகுப்பறைகள்
By Administrator
Published on 06/07/2025 09:00
News

புத்ராஜெயா,

ஏழு மாநிலங்களில் மாணவர்கள் நெரிசல் அதிகம் உள்ள 121 பள்ளிக்கூடங்களைக் கல்வி அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடங்களில் புதிய கூடுதல் வகுப்பறைகள் நிர்மாணிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது.

இந்தப் பள்ளிக்கூடங்களுக்குத் தளவாடங்கள், போதனா உபகரணங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளைக் கல்வி அமைச்சு ஏற்படுத்தித் தரும் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவு 88 மில்லியன் ரிங்கிட்டாகும்.

இவற்றுள் 103 பள்ளிகள் சிலாங்கூரிலும் 8 பள்ளிகள் பேராக்கிலும் 4 பள்ளிகள் பகாங்கிலும் 3 பள்ளிகள் நெகிரி செம்பிலானிலும் திரெங்கானு, கோலாலம்பூர், பினாங்கில் தலா ஒரு பள்ளியும் உள்ளன. மலேசிய பொதுப் பணித்துறை மூலமாக பொதுப்பணித்துறை அமைச்சு இந்தத் திட்டத்தைச் செயல்படுத் மேலும் தெரிவித்தது. தும் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தார் .

Comments