Offline
Menu
ஜெரான்டுட்டில் நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் உயிரிழப்பு, மூவர் காயம்
By Administrator
Published on 06/08/2025 08:00
News

குவந்தான்:

நேற்று நள்ளிரவு ஜெரான்டுட்டில் உள்ள ஜாலான் ஜெரான்டுட் ஃபெரியில் பெரோடுவா பெஸ்ஸா மற்றும் டொயோட்டா அல்பார்ட் ஆகிய இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் பலியானவர்கள் பேராக், உலு கிண்டாவில் வசிக்கும் பெரோடுவா பெஸ்ஸாவின் ஓட்டுநர் முகமட் இக்மல் இஷாக், 26 மற்றும் அவரது மனைவி நூர் அர்பிகா அஜிஸ் ஜாபர், 23 என அடையாளம் காணப்பட்டனர் என்று, ஜெரான்டுட் காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டன்ட் சுக்ரி முஹமட் கூறினார்.

அதேநேரம் நூர் அர்பிகாவின் மூன்று உடன்பிறப்புகளும் கொல்லப்பட்டனர் – முகமது சுல்கிப்லி, 21; முகமது அஜிசுல் ஹக்கிமி, 19; மற்றும் நூருல் ஹஸ்வானி, 17 – இவர்கள் அனைவரும் போத்தா, பேராக்கைச் சேர்ந்தவர்கள்.

மாரானில் இருந்து ஜெரான்டுட் நகரத்தை நோக்கிப் பயணித்த டொயோட்டா ஆல்பர்ட் கார், ஒரு சந்திப்பில் திடீரென யு-டர்ன் செய்த பெரோடுவா பெஸ்ஸா மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

“டொயோட்டா ஆல்பார்டின் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகளும் விபத்தில் காயமடைந்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக சுக்ரி மேலும் கூறினார்.

Comments