'குட் பேட் அக்லி' நடிகர் ஷைன் டாம் சாக்கோ காரில் பயணிக்கும் போது தருமபுரியில் ஏற்பட்ட விபத்தில் அவரது தந்தை உயிரிழந்தார். ஷைனுக்கு காயம் ஏற்பட்டு தற்போது திருச்சூரில் சிகிச்சையில் உள்ளார். சில தினங்களில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. விபத்தில் தந்தையை இழந்த வேதனையை கூறிய அவர், “விழித்த நேரத்தில் அப்பா உயிருடன் இல்லை” என கண்கலங்கினார். சுரேஷ் கோபி உள்ளிட்ட திரையுலகினர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.