விஷ்ணு சந்திரன் இயக்கத்தில், பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ‘ஹோலோகாஸ்ட்’ திரைப்படம் ஒரு வித்தியாசமான ஹாரர் கதைச்சுற்றில் உருவாகியுள்ளது. இதில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயற்கை அதிசயங்களும், அமானுஷ்ய அனுபவங்களும் படப்பிடிப்பின் போது நடந்ததாக குழுவினர் தெரிவித்துள்ளார். இயக்குநர் விஷ்ணு சந்திரன் கூறியதாவது:
“உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கினோம். படக்கதையை எழுத ஆரம்பித்தது முதல் விபத்துகள், இடையூறுகள் ஏற்பட்டன. ஒருவேளை நம்ப முடியாத விதமாக ஒரு கிராபிக்ஸ் காட்சி இயற்கையாகவே நனவானது. இது ரசிகர்களுக்கு அசத்தும்.”