Offline
இந்தி தெரியாது, குபேரா பட விழாவில் தமிழில் பேசிய தனுஷ்
By Administrator
Published on 06/12/2025 09:00
Entertainment

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள *‘குபேரா’* திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசை: தேவி ஸ்ரீ பிரசாத்.

ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில், தனுஷ் தமிழில் பேசினார். “எனக்கு இந்தி தெரியாது; ஆங்கிலமும் கொஞ்சம் தான்,” என்று கூறிய அவரின் உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments