Offline
99 வயதில் காலமான கொல்லங்குடி கருப்பாயி
By Administrator
Published on 06/15/2025 08:00
Entertainment

பழம்பெரும் நடிகையும் நாட்டுப்புறப் பாடகர் கொல்லங்குடி கருப்பாயி, 99 வயதில் இன்று காலமானார்.

ஆண்பாவம் படத்தில் விகே ராமசாமியின் தாய் மற்றும் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்த வேடம் மிகவும் பிரபலமானது. பின்னர், கோபாலா கோபாலா, கபடி கபடி, ஆயிசு நூறு, ஆண்களை நம்பாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் அறிமுகமாகும் முன், அவர் நாட்டுப்புற பாடல்களால் புகழ் பெற்றவராக இருந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை பாடிய இவர், பாரம்பரிய கலை உலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்திருந்தார்.

அவரது மரண செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments