விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முக பாண்டியன், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் நேற்று வெளியானது.
அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில், AI தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்த் மீண்டும் திரையில் தோன்றியிருப்பதும் முக்கிய சிறப்பு.
ரசிகர்கள் பெருமளவில் திரையரங்குகளுக்கு வந்ததால் ஹவுஸ் ஃபுல் காட்சிகளை பெற்ற இப்படம், முதல் நாளில் ரூ.80 லட்சம் வசூலித்து சிறப்பான தொடக்கம் பெற்றுள்ளது.