Offline
விமான விபத்தில் உயிரிழந்த புதுப்பெண்; கணவருடன் சேர்ந்து வாழ சென்றபோது சோகம்
By Administrator
Published on 06/15/2025 09:00
News

ஆமதாபாதில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவ மாணவர் விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில், குஜராதின் மெக்சனா மாவட்டத்தைச் சேர்ந்த புதுப்பெண் அங்கிதாவும் ஒருவர். கடந்த டிசம்பரில் வசந்த் என்பவரை திருமணம் செய்த அவர், கணவருடன் சேர்ந்து இங்கிலாந்தில் வாழ விருப்பமுடன், தேவையான ஆவணங்களைத் தயார் செய்து அந்த விமானத்தில் பயணித்திருந்தார்.

ஆனால் பயணத்தின் தொடக்கத்திலேயே விபத்தில் பலியான அங்கிதாவின் மரணம் அவரது குடும்பத்திலும் உறவினர்களிலும் பேரவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Comments