ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, மேகனிநகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது.விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் கல்லூரி வளாகத்தில் இருந்த 33 பேர் உட்பட மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த லண்டன் குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.பிரதமர் மோடி சம்பவ இடத்தையும், சிகிச்சை பெறுவோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், விபத்து காரணத்தை கண்டறிய விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.