இஸ்ரேல்–ஈரான் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் முறுகல், அணு ஆயுத விவகாரத்தில் சூடுபட்டுள்ளது. ஈரான், 15 அணு ஆயுதங்களுக்கு போதுமான அளவுக்கு யுரேனியம் செறிவூட்டியுள்ளது என்ற தகவலையடுத்து, இன்று அதிகாலை ஈரானில் உள்ள அணு உலைகள், ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை கிடங்குகளை இஸ்ரேல் விமானப்படை தாக்கியது.
இந்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர்; பாதுகாப்பு தளபதிகள், அணு விஞ்ஞானர்களும் அடங்கினர். 320 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.