மலேசியர்கள் நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள், ஆனால் ஆரோக்கியமாக இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கவலை தெரிவித்தார். சராசரி வாழ்நாள் 76 ஆனாலும், அதில் 67 ஆண்டுகள் மட்டுமே நல்ல ஆரோக்கியத்தில் இருக்கிறார்கள் என்றும், அந்த இடைவெளி கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்துள்ளதையும் கூறினார்.நீடித்த வாழ்நாளை ஆரோக்கியமான வாழ்வாக மாற்ற, நோய்களை சிகிச்சை செய்வதைவிட, தடுப்புச் சிகிச்சை மற்றும் சுகாதாரக் கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.நாம் வயதான சமுதாயமாக மாறிக் கொண்டிருப்பதால், சுகாதார அமைப்புகள், சமூக பராமரிப்பு, வீடுகள் மற்றும் நிதி கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.