2023ஆம் ஆண்டு கம்பூங் ஸுங்கை பெஞ்சாலாவில் தனது முதிய பெற்றோர்களை கொலை செய்த வழக்கில், வேலை இல்லாத 44 வயது ஆண் அபெண்டி முகமட் அகஸ் @ முகமட் அலிக்கு, இன்று உயர் நீதிமன்றம் 40 ஆண்டு சிறை மற்றும் 24 கூல் தண்டனை வழங்கியது.நீதிபதி கே. முனியாண்டி இந்தக் குற்றங்கள் கடுமையானவை என கூறி தீர்ப்பு வழங்கினார்."தந்தை தாயின் உயிரை பறித்த குற்றவாளிக்கு, எந்த காரணத்திற்காகவும் அவர்களை கொல்லும் உரிமை இல்லை," என்று நீதிபதி தீர்ப்பளிக்கையிலேக் கூறினார்.