மலேசியாவில் ஓட்டுநர் குறைவு காரணமாக சில பேருந்து ஓட்டுநர்கள் மாதம் 28 நாட்கள் வேலை செய்கிறார்கள். பொதுவாக ஓட்டுநர்கள் மாதம் 20 நாட்கள் வேலை செய்து 10 நாட்கள் ஓய்வெடுப்பார்கள். ஆனால் கூடுதல் சம்பளம் பெற சிலர் விரும்பி முழு மாதமும் பணியாற்றுகின்றனர்.பெரும்பாலான ஓட்டுநர்கள் அடிப்படை சம்பளம் RM1,700; பயணக் கூலி, ஓவர்டைம் சம்பளம் சேர்த்து மாதம் RM3,000–5,000 வரை சம்பாதிக்கின்றனர்.
ஓட்டுநர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்க 6 மணி நேர இடைவெளி கொடுக்கப்படுகிறது. ஓட்டுநர் அதிகமாக வேலை செய்ய வேண்டிய போது, புதிய ஓட்டுநர்கள் பொறுப்பேற்கின்றனர்.மேலும், வயதான ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் பயணிகளுக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்று கவலை தெரிவித்துள்ளனர்.