வாட்ஸ்அப் தனது ஸ்டேடஸ் பகுதியில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போல் விளம்பரங்களை இட விரும்புகிறது. 2009ல் தொடங்கி, 2014ல் மெட்டா வாங்கிய வாட்ஸ்அப், படங்கள், வீடியோக்கள், ஸ்டேடஸ் உள்ளிட்ட வசதிகளை ஏற்கனவே வழங்கி வருகிறது. தற்போது வருவாயை அதிகரிக்க, ஸ்டேடஸ் இடையே விளம்பரங்கள் சேர்க்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது. தனிப்பட்ட சாட்கள் பாதிக்கப்படாது என்றும் உறுதி அளித்துள்ளது.