மலேசியாவின் வளர்ச்சி முயற்சிகள் மக்கள் நலனையே மையமாகக் கொண்டுள்ளதாக பிரதமரின் மூத்த செய்தித்துறை செயலாளர் துங்கு நச்ருல் அபைதா தெரிவித்தார்.முக்கியமான எந்த கொள்கையும் அனைத்து தரப்பினரின் கலந்தாலோசனையுடன் எடுக்கப்படும் என அவர் கூறினார். நாட்டின் வரி வருமானம் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, வரி விரிவாக்கம் அவசியமானதெனவும், ஆனால் அதன் சுமை பொதுமக்கள் மீது விழக்கூடாது எனவும் அரசு உறுதி வழங்குகிறது.சும்பங்கன் துனாய் ரக்மா, சும்பங்கன் ஆசாஸ் ரக்மா ஆகிய திட்டங்கள், பஞ்சாயத்து மருந்துமனைகள் மற்றும் 8,000க்கும் மேற்பட்ட பள்ளி கழிவறைகள் மேம்பாடு போன்ற மக்கள் நல திட்டங்களுக்கே வரி வருமானம் பயன்படுத்தப்படுகிறது.மதானி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் நலனுக்காகத்தான் என அவர் வலியுறுத்தினார்