பகாங் மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரத்தில் 26 புதிய சம்பவங்கள் பதிவு செய்யபட்டுள்ளன, இதில் 11 சம்பவங்கள் அதிகரிப்பு. குவாந்தான், தெமர்லோ, ரவுப் மாவட்டங்களில் அதிக தொற்று உள்ளது. ஜனவரி முதல் ஜூன் 14 வரை 485 பாதிப்புகள் இருந்தும் உயிரிழப்பு இல்லை. தெமர்லோ மாவட்டத்தில் தாமான் ரிம்பா குடியிருப்பில் 8 பேர் பாதிப்பு ஏற்பட்டது. சுகாதார அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து, ஏடிஸ் கொசு ஒழிப்பில் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.