மிஷன் இம்பாசிபிள் 8-வது பாகத்தில் (தி ஃபைனல் ரெக்கனி) எரியும் பாராசூட்டில் 16 முறை குதித்து கின்னஸ் சாதனை படைத்த டாம் க்ரூஸுக்கு, திரைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் கவர்னர்ஸ் விருது விழாவில் வழங்கப்படும். 35 ஆண்டுகளுக்கு பிறகு டாம் க்ரூஸுக்கு இது கிடைப்பது சிறப்பு.