இப்போவின் கம்போங் சுங்கை ராப்பாட் தம்பாக் பகுதியில் இரண்டடி மாடி வீட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 84 வயதுடைய மூதாட்டி உயிரிழந்தார்.
தீயில் சிக்கிய அவரது 83 வயது கணவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மற்ற நால்வரும் (வயது 18-49) அவசரமாக வெளியேறி உயிர் தப்பினர்.
தீவிபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இது திடீர் மரணமாக (Sudden Death Report) பதிவாகியுள்ளது. தகவல் உள்ளவர்கள் இப்போ மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை (DCC) தொடர்புகொள்ளலாம்.