உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஆர்ய்னா சபாலென்கா, எலேனா ரைபகினாவை எதிர்த்து நான்கு மேட்ச் பாயிண்ட்களை தடுத்து அதிரடியான முறையில் வெற்றி பெற்று பெர்லின் அரையிறுதிக்கு முன்னேறினார்.
மூன்று செட் த்ரில்லரில் சபாலென்கா 7-6(8/6), 3-6, 7-6(8/6) என வென்றார். அடுத்த சுற்றில் 2023 விம்பிள்டன் சாம்பியன் வொன்ட்ரூசோவாவை சந்திக்கிறார்.
மற்றொரு அரையிறுதியில் சீனாவின் வாங் சின்யு மற்றும் ரஷியாவின் சம்சோனோவா மோதவுள்ளனர்.