அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் தஹொமாவில் உள்ள தஹொ ஏரியில், மோசமான வானிலை காரணமாக 10 பேர் பயணித்த படகு மாலை 3 மணியளவில் கவிழ்ந்தது.விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ள 2 பேரை தேடும் பணிகள் நீடிக்கின்றன. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.