பாங்காக், தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லை பிரச்சினை கடந்த மாதம் மேலும் மோசமடைந்தது. எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலில், ஒரு கம்போடிய ராணுவ வீரர் உயிரிழந்தார். இதனால் இரு நாடுகளும் கடுமையாகப் பதிலடி எடுத்தன.கம்போடியா, தாய்லாந்திலிருந்து காய்கறி, பழங்கள் ஆகியவற்றின் இறக்குமதி மற்றும் திரைப்படங்கள், நாடகங்களின் ஒளிபரப்பை தடை செய்தது. இதற்கு பதிலாக, தாய்லாந்து தற்போது கம்போடியாவுடனான எல்லையை மூடியுள்ளது. இருப்பினும், மாணவர்கள் மற்றும் மருத்துவ சேவைக்காக பயணிப்பவர்களுக்கு மட்டும் விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.