Offline
Menu
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசா பலி எண்ணிக்கை 56,000 உயர்வு!
By Administrator
Published on 06/26/2025 09:00
News

காசா நகரம்: கடந்த 2023 அக்டோபர் 7ல், ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேர் பணயமாகக் கடத்தப்பட்டனர்.இதையடுத்து, ஹமாஸ் மீது போர் தொடங்கிய இஸ்ரேல், காசா பகுதியில் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களை தீவிரமாக நடத்தி வருகிறது. பலரை பணயத்திலிருந்து மீட்டுள்ளாலும், சிலர் கொல்லப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது, ஹமாஸ் பிடியில் 50 பேர் இருப்பதாகவும், இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,077 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,31,848 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறும் இந்த போர் தற்போது மிகக் கடுமையான நிலைக்குச் சென்றுள்ளது.

Comments