இந்தோனேசியாவின் லொம்பொக் தீவில் உள்ள ரிஞானி எரிமலையில் பள்ளத்தாக்கில் விழுந்து காணாமல் போன 26 வயதான பிரேசிலிய சுற்றுலாப் பயணி ஜூலியானா மரின்ஸ், பல நாள் தேடலுக்கு பிறகு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.தீவிரமான வானிலை மற்றும் கடுமையான நிலப்பரப்பு காரணமாக மீட்பு பணிகள் தாமதமானது. ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அவரது உடல், 600 மீட்டர் ஆழத்தில் இருந்தது. புதன்கிழமை காலை உடல் மீட்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மரின்ஸ், பயணத்தின் போது தாய்லாந்து மற்றும் வியட்நாமைச் சுற்றிப் பார்த்து இண்டோனேசியா வந்திருந்தார்.