BRICS நாடுகள், மத்திய கிழக்கில் அணுஅாயுதங்கள் மற்றும் சக்திவாய்ந்த படையெழுச்சி ஆயுதங்களை தடை செய்யும் பகுதி உருவாக வேண்டும் எனக் கோரியுள்ளன. இஸ்ரேல் ஜூன் 13 முதல் ஈரானுக்கு மேற்கொண்ட தாக்குதல்கள், ஐ.நா. விதிகளுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் முரணாகும் எனக் கடும் கண்டனம் தெரிவித்தன.போரை தவிர்த்து, அனைத்து தரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என BRICS வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள், அமைதியான அணுசக்தி நிலையங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஈரானின் அணுவாயுத திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபணமற்றவையெனவும் BRICS குறிப்பிட்டுள்ளது.