சபாவில் பாகிஸ்தானியர்கள் மைகாட் (IC) களுக்கு கடுமையாக விண்ணப்பித்து வருகின்றனர் என்ற புகார்கள் மீண்டும் எழுந்துள்ளன.தேசிய பதிவுத் துறை (JPN) ஒருவர் மட்டுமே பாகிஸ்தானியர் என்றும், மற்ற மூவர் மலேசிய குடிமக்கள் என உறுதிப்படுத்தியுள்ளது.பிறந்த சான்றிதழை தவறாக பயன்படுத்தி விண்ணப்பித்த முகமட் இசாஸ் அபிட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரது அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற மூவரும் மலேசிய அரசியலமைப்பின் பிரிவு 14(1) கீழ் சட்டப்படி குடிமக்கள் எனவும் JPN தெரிவித்துள்ளது.மலேசியா தன்னிச்சையாக குடியுரிமை வழங்காது என்றும், அனைத்து விண்ணப்பங்களும் சட்டப்படி பரிசீலிக்கப்படுவதாகவும் துறை வலியுறுத்தியுள்ளது.