ஜோகூரின் கோங் கோங் மற்றும் செனை-டெசாரு நெடுஞ்சாலையில் (SDE) போக்குவரத்து நெரிசலை குறைக்கும் கன்ட்ரி டோல் கட்டமைப்புத் திட்டம் டிசம்பர் 15க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.திட்டம் தற்போதைக்கு 20.43% முன்னேற்றம் காண்கிறது.2021ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட கோங் கோங் பகுதியை SDE-க்கு இணைக்கும் பாச்சி மேம்பாலம் இதன் மூலம் திறக்கப்படும். இது பயணத் தூரத்தை 7 கிலோமீட்டருக்கு குறைத்து, கூடுதல் டோல் செலவையும் (RM11.20) தவிர்க்க உதவும்.பாதுகாப்பற்ற யூ-டர்ன்கள் போன்ற சாலைவழித் தவறுகளையும் இந்த திட்டம் தவிர்க்க உதவும்.