2020 முதல் 2024 வரை, மலேசிய கடற்பரப்பில் வெளிநாட்டு மீனவர்களின் ஊடுருவலால் RM823.88 மில்லியன் மதிப்பில் மீன்வள இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீன்வளத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை 515 ஊடுருவல் வழக்குகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க MMEA, கடற்படை மற்றும் மற்ற அமைப்புகளுடன் கூட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் துறைமுக இயக்கங்கள், பிராந்திய ஒத்துழைப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.