Offline
Menu
9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்
By Administrator
Published on 06/27/2025 09:00
News

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஆசிர் நந்தா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

இதனிடையே, தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பள்ளி நிர்வாகம் மாணவி ஆசிர் நந்தாவை தனிமைப்படுத்தி வேறு வகுப்பில் அமர வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி முடிந்து நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்த சிறுமி ஆசிர் நந்தா வீட்டில் யாரும் இல்லாதபோது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments