சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை: சம்பவத்திற்கு பின் மாணவியின் ATM அட்டையை பயன்படுத்திய சந்தேகநபர்
கோலாலம்பூர்:
சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபர், சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிடுந்து ATM கார்டைப் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அங்குள்ள ATMகளில் இருந்து ஐந்து முதல் ஆறு பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதை போலீசார் கண்டறிந்ததாக செப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் நோர்ஹிசாம் பஹாமன் தெரிவித்தார்.
“கொலை நடந்த சிறிது நேரத்திலேயே சந்தேக நபர், பாதிக்கப்பட்டவரின் ATM கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கத் தொடங்கினார்,” என்று அவர் கூறினார், மேலும் சந்தேக நபரைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கொலையின் பின் காணாமல் போனதாகக் கூறப்படும் மதிப்புமிக்க பொருட்களில் பாதிக்கப்பட்டவரின்
ATM கார்டும் இருப்பதாக நோர்ஹிசாம் கூறினார்.