கோலாலம்பூர்:
சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபரின் இருப்பிடத்தைக் கண்டறிய, CCTV காட்சிகளை போலீசார் பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் இருந்து ஏற்கனவே CCTV காட்சிகளைப் பெற்றுள்ளதாகவும், சந்தேக நபரின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“சந்தேக நபரை அடையாளம் காணவும், அவரது இருப்பிடத்தைக் கண்டறியவும் இந்த CCTV காட்சிகள் பயன்படுத்தப்படும்” என்று அவர் சொன்னார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குப் பிறகு சந்தேக நபர் அவரது வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுத்ததாக நம்பப்படுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.