தடை செய்யப்பட்ட மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தின் நெருக்கமான நண்பராக நடிகர் கிருஷ்ணா தற்போது விசாரணை முற்றுகையில் சிக்கியுள்ளார்.
போலீசார் அவரிடம் வாட்ஸ்அப் ஹிஸ்டரி முதல் வங்கி விவரங்கள் வரை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். 18 மணி நேர விசாரணையில் கிருஷ்ணா, “ஸ்ரீகாந்த் என் நெருங்கிய நண்பர். ஆனால் அவரால் நான் மருந்து எடுத்தேன் என நம்புவது தவறு. எனக்கு உடல் பிரச்சனைகள் உள்ளதால் இது எனக்குப் பொருத்தமல்ல,” என விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் அவர் எந்த மருந்தையும் எடுத்ததற்கான ஆதாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் விசாரணையை தீவிரமாக தொடர்கின்றனர், மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.