சமீபத்தில் Indian 2 மற்றும் Thuglife படங்கள் எதிர்பார்ப்பை எட்டாத நிலையில் இருந்தாலும், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது பயணத்தை உறுதியோடு முன்னெடுத்து வருகிறார்.
தனி பாதையில் செல்லும் கமலுக்கு தற்போது ஒரு பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது — உலக புகழ்பெற்ற “தி அகாடமி”யிலிருந்து அவருக்கு உறுப்பினர் ஆக அழைப்பு வந்துள்ளது.
இந்தப் பட்டியலில் கமலுடன் ஆயுஷ்மான் குரானா, தயாரிப்பாளர் பயல் கபாடியா மற்றும் பாடகி அரியானா கிராண்டே போன்றோரும் இடம்பிடித்துள்ளனர்.
இது கமல்ஹாசன் ஆஸ்கர் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்ற அரிய வாய்ப்பு. இரண்டு படங்கள் தோல்வியடைந்தபோதும் வந்த இந்த அங்கீகாரம் தமிழ் திரையுலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.