சரவாக் மாநிலத்தின் நான்கு அரசுப் பல்கலைக்கழகங்களில் வெளி விடுதிகளில் வசிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக புதிய வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அமைச்சர் டத்தோக் டாக்டர் அன்னுவர் ரபாயி தெரிவித்ததாவது, மாணவர்கள் கல்லூரி அருகிலேயே மட்டும் வீடு வாடகைக்கு எடுக்க அனுமதிக்கப்படும். வீடுகளும், வீட்டு உரிமையாளர்களும், பல்கலைக்கழக விடுதி பிரிவில் பதிவு செய்ய வேண்டும்.வீடுகள் சுகாதாரத்துடனும் பாதுகாப்பான சூழலுடனும் இருக்க வேண்டும் என்பதையும், அவை சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.மாணவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பதையும், அவர்கள் வசிக்கும் இடங்கள் சிரமமானவையா அல்லது அச்சுறுத்தலுள்ள இடங்களா என்பதையும் பல்கலைக்கழகங்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.மேலும், தங்கும் இடங்கள் கடைக்கூடங்கள் போல் வாடகைக்கு அனுமதிக்கப்படாத இடங்களில் இருக்கக் கூடாது என்றும், இவை ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.