நிதிச் சேவைகளுக்கான சேவை வரி விரிவாக்கம் அன்றாட வங்கி சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என மலேசியா வங்கிச் சங்கங்கள் உறுதி செய்துள்ளன. ஜூலை 1 முதல் தொடங்கும் புதிய வரம்பு பெருநிறுவனங்கள் மற்றும் முதலீட்டு சேவைகளுக்கு மட்டும் பொருந்தும். நடப்பு, சேமிப்பு கணக்குகள், எடிடிஎம் பரிவர்த்தனைகள், பில் செலுத்தல் போன்ற அத்தியாவசிய சேவைகள் வரிவிலக்கு பெறும். வட்டி, அபராதங்கள், கிரெடிட் கார்டு கட்டணங்கள் பாதிக்கப்படாது. வாடிக்கையாளர்கள் மாற்றம் பற்றி தெளிவுக்கு வங்கிகளை தொடர்புகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.