இந்தியா குறித்த தகவல்களை சீனா தங்களுக்கு வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவுடனான இராணுவ மோதலின்போது போது சீனா தங்களுடன் ஒத்துழைத்ததாகவும், இந்தியாவின் முக்கியமான உளவுத்துறை தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
பதற்றமான காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் வகையில் இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் குறித்த தகவல்களை சீனா தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.
“சீனா செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அச்சுறுத்தலின் அளவு குறித்த தகவல்களை வழங்கியது. பரஸ்பர அச்சுறுத்தல் இருக்கும்போது, நாடுகளுக்கு இடையே தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
நாம் எதிர்கொள்ளும் அதே சிரமங்களையும் சவால்களையும் சீனா இந்தியாவுடன் எதிர்கொள்கிறது. மூலோபாய ரீதியாக நெருக்கமாக இருக்கும் இரண்டு நாடுகள் உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்வது இயல்பானது” என்று ஆசிப் கூறினார்.