Offline
Menu
கழிவறையில் அமர்ந்தபடி நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற நபர்
By Administrator
Published on 06/29/2025 08:00
News

அகமதாபாத்,நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, நபர் ஒருவர் கழிவறையில் இருந்து நேரடி ஒளிபரப்பில் ஆஜரான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காசோலை மோசடி தொடர்பான வழக்கு ஒன்றை குஜராத் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, புகார் அளித்தவரான சமத் பேட்டரியை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதி நிர்சார் எஸ் தேசாய் அமர்வு முன்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி நேரடி ஒளிபரப்பு மூலம் சமத் பேட்டரி நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், அவர் கழிப்பறை இருக்கையில் அமர்ந்து தனது ஹெட்செட்டை அணிந்து கொண்டு ஆஜராகியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவில், அந்த நபர் தனது மொபைல் போனை தரையில் வைத்துக்கொண்டு தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்வதையும், எதிர்தரப்பில் நீதிமன்ற அறையில் வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்து வாதிடுவதையும் காண முடிகிறது. இது தொடர்பான வீடியொ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக ஒருவர் செயல்படுவதற்கு பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

Comments