Offline
Menu
ஆசிரமத்தில் கஞ்சா விற்ற பிரபல ‘யோகா குரு’ அதிரடி கைது!
By Administrator
Published on 06/29/2025 08:00
News

தனது ஆசிரமம் மூலம் கஞ்சா விற்பனை செய்ததற்காக பிரபல யோகா குரு கைது தருண் கிராந்தி அகர்வால் செய்யப்பட்டார்.

தருண் கிராந்தி அகர்வால் கடந்த 20 வருடங்களாக கோவாவில் யோகா வகுப்புகளை கற்பித்து வந்தார். வெளிநாட்டினருக்கும் அவரை தேடி வந்து யோகா கற்றனர்.

இறுதியாக அவர் கோவாவில் உள்ள ஆசிரமத்தின் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு சத்தீஸ்கருக்கு வந்தார். அங்கு ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் ஒரு புதிய ஆசிரமத்தை கட்டும் பணியை தருண் கிராந்தி அகர்வால் மேற்கொண்டு வந்தார்.

ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு புதிய ஆசிரமத்தைக் கட்டும் பணியைத் தொடங்கினார். அதற்கு முன் அங்கு அவர் ஒரு தற்காலிக ஆசிரமத்தையும் அமைத்திருந்தார். இங்கு அண்மையில் வெளிநாட்டிலிருந்து சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

இறுதியாக, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. NDPS பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு யோகா குரு தருண் கிராந்தி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments