சுங்கை பூலோ:
அலங்கோலமாகக் கிடந்த அறை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் ரூம்மேட் ஒருவரது மரணத்தில் முடிந்ததாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் சுங்கை பெலோங்கின் கம்போங் குபு காஜாவில் உள்ள ஒரு வீட்டில் நடந்தது.
இருவரும் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கிளந்தானில் இருந்து வந்து, பின்னர் ஒன்றாக வாழ்ந்து வருவதாக, சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஹபீஸ் முஹம்மது நோர் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில், ஒரு அலங்கோலமான அறை தொடர்பான வீட்டுப் பிரச்சினை தொடர்பில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இந்த சண்டையின் போது, 33 வயதான பாதிக்கப்பட்டவரை 40 வயது சந்தேக நபர் கத்தியால் குத்திக் கொன்றார்,” என்று அவர் இன்று கூறினார்.
மேலும், சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
கொலை குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேக நபர் ஜூலை 1 வரை ஆறு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.