கோலாலம்பூர்:
கடந்த மாதத்திலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 49 வயது நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை போலீசார் நாடுகின்றனர்.
ஹஸ்னி ஹாஷிம் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், மே 27 அன்று பிற்பகல் 2.40 மணிக்கு சிலாங்கூரில் உள்ள மெனாரா சூரியா, ஜாலான் சுபாங் மாஸ், தாமான் சுபாங் மாஸ், சுபாங் ஜெயா என்ற இடத்தில் கடைசியாகக் காணப்பட்டதாக சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மமட் தெரிவித்தார்.
“காணாமல் போனவர் குறித்த புகார் புதன்கிழமை (ஜூன் 25) பிற்பகல் 1.55 மணிக்கு கிடைத்தது. காணாமல்போன ஹஸ்னி பழுப்பு நிறமானவர், குட்டையான கருப்பு முடி, 170 செ.மீ உயரம் மற்றும் தோராயமாக 80 கிலோ எடை உள்ளவர் ” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காணாமல் போன நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறும் அல்லது சுபாங் ஜெயா மாவட்ட காவல் தலைமையக செயல்பாட்டு அறையை 03-78627222 / 03-78627100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் வான் அஸ்லான் கேட்டுக் கொண்டார்.