Offline
Menu
ஒபாமாவுடன் விவாகரத்தா? – மிச்செல் ஒபாமா மீண்டும் விளக்கம்
By Administrator
Published on 06/30/2025 09:00
News

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை. மேலும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடக்கும் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவாகவே விவாகரத்து வதந்திகள் வலுப்பெற்றன. இதனையடுத்து விவாகரத்து குறித்த வதந்திகளை மிச்செல் ஒபாமா மறுத்தார். ஆனாலும் விவாகரத்து வதந்திகள் தற்போது வரை குறைந்தபாடில்லை.

இந்நிலையில், விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு மீண்டும் ஒருமுறை மிச்செல் ஒபாமா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மிச்செல் ஒபாமா, “எங்களுக்கு 60 வயது ஆகிறது. என் கணவருடன் நான் வெளியில் செல்வதை மக்கள் பார்க்காததால், எங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக வதந்திகள் பரவுகின்றன. எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், நாங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில்லை.

இறுதிச் சடங்குகள், பதவியேற்பு விழாககாலில் நான் கலந்து கொள்ள கூடாது என்று நான் முடிவெடுத்தேன். இந்த விஷயங்களில் இருந்து நான் விலகி இருக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தது தான் வதந்திகளுக்கு காரணமாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

Comments