Offline
Menu
சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசு; கோலா சிலாங்கூரில் சம்பவம்
By Administrator
Published on 06/30/2025 09:00
News

கோலாலம்பூர்:

கோல சிலாங்கூர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள புக்கிட் ரோத்தானில் உள்ள கம்போங் அபி அபி, மஸ்ஜித் ஜாமியுல் ஹுடா அருகே சாலையோரத்தில் நேற்று இரவு ஒரு பிளாஸ்டிக் பையில் குறித்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டதாக, கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அசாஹாருதீன் தாஜுடின் கூறினார்.

அந்தக் குழந்தை பிறந்து சுமார் ஒரு வாரம் ஆகிறது என்றும், 2.135 கிலோகிராம் எடை கொண்ட குறித்த குழந்தையின் தொப்புள் கொடி சரியான நிலையில் இருந்தது என்றும் அவர் சொன்னார்.

இக்குழந்தை பொதுமக்களால் ஒரு பிளாஸ்டிக் பையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கூறிய அவர், தற்போது மேலதிக பரிசோதனைக்காக குழந்தை தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Comments