தத்துக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று, ஜெர்மனியுடன் மலேசியாவின் உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
மலேசியாவை விட்டு புறப்படும் ஜெர்மன் தூதர் டாக்டர் பீட்டர் ப்ளோமெயெரை, பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தபோது அவர் இதை கூறினார்.
அன்வார் தனது பேஸ்புக் பதிவில், “வர்த்தக முதலீட்டு வாய்ப்புகளை விரிவாக்குவது மட்டுமின்றி, கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழில்பயிற்சி கல்வி (TVET), கலாசார பரிமாற்றம் ஆகியவை இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வையும், பல்வகைத் தன்மையை மதிப்பதையும் உருவாக்கும்,” எனத் தெரிவித்தார்.
இந்த விரிவான ஒத்துழைப்பு, இரு மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, நிலைத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.